வளைகுடாவில் ஏரியும் கப்பல்கள்.. ஆழ்ந்த கலக்கத்தில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி -
வளைகுடாவிலும் அதற்கு அப்பாலும் நடந்த தாக்குதல்களாலும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மோசமடைவதாலும் தாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகக் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி கூறியுள்ளனர்.
மூன்று ஐரோப்பிய நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகக் கூறினாலும், இந்த ஒப்பந்தம் வீழ்ச்சியடையும் அபாயத்தில் தாங்கள் கவலைப்படுவதாக கூறி உள்ளனர்.
எலிசி வெளியிட்டுள்ள பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தலைவர்களின் அறிக்கை ஒன்றில், ஒரு பொறுப்பான வழியில் செயல்படவும், பதட்டங்கள் அதிகரிப்பதைத் தடுக்கவும், உரையாடலை மீண்டும் தொடங்கவும் இந்த தருணம் வந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கிறோம் என கூறியுள்ளனர்.
மேலும், அனைத்து தரப்பினரும் அவர்களின் பணியை இடைநிறுத்திவிட்டு, அவர்களின் செயல்களினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.
வளைகுடாவில் ஏரியும் கப்பல்கள்.. ஆழ்ந்த கலக்கத்தில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி -
Reviewed by Author
on
July 16, 2019
Rating:

No comments:
Post a Comment