அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-உணர்வு பூர்வமாக இடம் பெற்ற வெலிக்கடை சிறைப்படு கொலை நினைவு நாள் நிகழ்வு

வெலிக்கடை சிறைசாலையில் கொடூரமாக கொல்லப்பட்ட விடுதலை போரட்டத்தின் ஆரம்பத்தலைவர்களான தலைவர் தங்கதுரை தளபதி குட்டிமணி  போராளிகளான ஜெகன் தேவன் நடேசுதாசன் குமார் சிவபாதம் சிறீக்குமார் மரியாம்பிள்ளை குமார குலசிங்கம் உட்பட 53 மூன்று அரசியல் கைதிகளின் 36 வது நினைவு நாள் நிகழ்வு இன்று மாலை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மன்னார் அலுவலகத்தில் இடம் பெற்றது

1983 ஆண்டு ஆடி மாதம் தமிழ் மக்களின் உரிமை போரட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொலை செய்யதிட்டமிடப்பட்டபோதும் தழிழ் ஈழம் எம் கண்கள் காணும் என்று கூறியமைக்காக வெலிக்கடை சிறையில் வைத்து கண்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் போராளிகள் உட்பட 53 அரசியல் கைதிகளின் நினைவு நாள் நிகழ்வு மற்றும் அஞ்சலி நிகழ்வானது இன்று மாலை தமிழ் உணர்வாளர்கள் சமூக ஆர்வலர்கள் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் பங்கு பற்றுதலுடம் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது

குறித்த நினைவு நாள் நிகழ்வில்
இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம் பெற்றது.

அத்தோடு தமிழ் மக்களுக்காய் இன்னுயிர் ஈந்த தியாகளின் தியாகத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகளும் பொது இடங்களின் மக்களின் நினைவுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.









மன்னார்-உணர்வு பூர்வமாக இடம் பெற்ற வெலிக்கடை சிறைப்படு கொலை நினைவு நாள் நிகழ்வு Reviewed by Author on July 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.