லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் வான் தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 42 பேர் உயிரிழந்தனர். வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கு எதிராக கலிஃபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன. இரு தரப்பினரும் வான் வழித்தாக்குதல், துப்பாக்கிச் சமர் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், லிபியா நாட்டின் தலைநகரான ட்ரிபோலியை கைப்பற்ற கலிஃபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படையினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இந்த மோதலில் பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் தென்மேற்குகில் உள்ள முர்ஸுக் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வான்வெளி தாக்குதலில் 42 சாதாரண பொதுமக்கள் உயிரிழந்தனர். அவர்கள் குறித்த பகுதியில் நடைபெற்ற திருமணவிழா ஒன்றில் பங்கேற்றிருந்த போது இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் வான் தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
August 07, 2019
Rating:

No comments:
Post a Comment