அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்துக்கு வந்த துறைமுகம் கைநழுவியது கடற்தொழில் திணைக்களம் சரியான முறையில் செயல்படாமையே -சாள்ஸ் நிர்மலநாதன்MP

மன்னார் மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்காக உலக வங்கி நிதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும்  சரியான முறையில் கடற்தொழில் திணைக்களம் செயல்படாமையாலேயே இவ் திட்டம் கைநழுவிச் சென்றுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்தார்.

(01.08.2019) இவ் வருடத்தின் மன்னார் மாவட்டத்தின்
முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்ற
உறுப்பினர்களும் இவ் அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷhட் பதியுதீன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அரசாங்கக அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் உட்பட அனைத்து திணைக்கள அதிகாரிகளும் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் கடற்தொழில் சம்பந்தமாக ஆராயப்பட்டபோது பேசாலையில்
அமைக்கப்பட இருந்த துறைமுகம் விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கடற்தொழில் திணைக்கள அதிகாரி பவானி கருத்து தெரிவிக்கையில்
தற்பொழுது மன்னார் பேசாலை பகுதியில் உலக வங்கி நிதித் திட்டத்தின் கீழ்
நிர்மானிக்கப்பட இருந்த துறைமுகம் அப்பகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட
நிலையில் அது வைவிடப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பேசாலை
பகுதியில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கை 2013ம் ஆண்டு முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதாவது இங்கு துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கையாக முதலில் ஆய்வு செய்யப்பட்டு பின் மாவட்ட ரீதியாக சங்கங்கங்களுடன் பேசப்பட்டது.

பேசாலை பகுதியிலே அதிகமான இலுவைப்படகுகள் காணப்படுவதால் இந்த துறைமுகம் பேசாலை பகுதியில் அமைவதே உகந்தது என அங்கு நிர்மானிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

மூன்று வருடங்களாக இதற்கான நடவக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டபின்
இறுதியில் அப்பகுதி மக்கள் இங்கு துறைமுகம் தேவையில்லையென்று
தெரிவிக்கப்பட்டமையாலேயே இது தற்பொழுது கைவிடப்பட்டுள்ளது.

அதாவது 25 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 4000 கோடி ரூபா நிதி உதவியில் இவ் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கையாகவே இருந்தது என தெரிவித்தார்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இங்கு தெரிவிக்கையில் அதாவது ஒரு மாவட்டத்துக்கு வந்த இவ் திட்டத்தை கடற்தொழில் திணைக்களம் ஒரு கிராமத்து மீனவ சமூகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டமையாலேயே இவ் திட்டம் தற்பொழுது எம்மைவிட்டு கைநழுவியுள்ளது.

இது சம்பந்தமாக எல்லாம் கைநழுவி சென்றபின்பே மக்கள் பிரதிநிதிகளாகிய
எங்களிடம் வந்தீர்கள். இருந்தபோதும் நான் ஆளுநரிடம் மற்றும்
சம்பந்தப்பட்டவர்களிடம் இது விடயமாக பேசியிருந்தேன்.

நான் தெரிவிப்பது என்னவென்றால் அந்த துறைமுகம் இங்கு அமைவதென்றால் இவ் துறைமுகத்தில் தரித்து நிறுத்துவதற்கான  படகுகள் எம் மாவட்ட மீனவ சமூகத்திடம் இ;ல்லை. ஆகவே முதலில் எம் மீனவர்களுக்கு அதற்கேற்ற படகுகளை வழங்கியபின் அதற்கான துறைமகத்தை அமைப்பது சிறந்தது என நான்
சம்பந்தவர்களிடம் தெரிவித்துள்ளேன். இங்கு துறைமுகம் அமைப்பது விடயமாக எனக்கு தோன்றுவது எங்க வீட்டு முற்றத்திலுள்ள கொடியில் பக்கத்து வீட்டார் துணிவகைகள் உலர விடும் கதையாகத்தான் இருக்கும் என்றார்.



மன்னார் மாவட்டத்துக்கு வந்த துறைமுகம் கைநழுவியது கடற்தொழில் திணைக்களம் சரியான முறையில் செயல்படாமையே -சாள்ஸ் நிர்மலநாதன்MP Reviewed by Author on August 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.