சுவிட்சர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர் -
குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாரா நேரத்தில் சிறுமி தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.
சிறுமியுடன் மற்றுமொருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் தம்னுடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் தேடிப்பார்த்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோதும் அது பயனளிக்காத நிலையில் விசேட பயிற்சி பெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் உலங்கு வானூர்தி மூலம் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் குறித்த ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்தில் இருந்து சிறுமியும் மேலும் ஒரு நபரும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடனேயே முதலுதவிகள் வழங்கப்பட்டபோதும் குறித்த சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மீட்கப்பட்ட மற்றுமொரு நபர் உலங்கு வானூர்தி மூலம் வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த ஏரியில் இதுவரையில் எவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை எனவும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை எனவும அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், உயிரிழந்த சிறுமி அருகில் உள்ளவர்களும் சகஜமாக பழகக் கூடியவரென்றும் சுறு சுறுப்பான அவரது செயற்பாடுகள் அங்கிருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் சிறுமிக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சிறுமியின் இழப்பு குடும்பத்தாரையும் அருகில் உள்ளவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர் -
Reviewed by Author
on
August 06, 2019
Rating:

No comments:
Post a Comment