அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க போகும் தமிழர்கள்! கோத்தாவுடன், பிள்ளையான்,கருணா....
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகள் கோத்தபாய ராஜபக்சவிற்கே கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ் மக்களின் வாக்குகள் 20 இலட்சம் இருக்கின்றது. அதில் 15 இலட்ச வாக்குளில் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப் பெருமாள், பிள்ளையான், விநாயகமூர்த்தி முரளிதரன், தொண்டமான் உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர்.
அப்படி எடுக்கின்றபோது இந்த 15 இலட்ச வாக்குகளில் இப்போது டக்ளஸ், வரதராஜப்பெருமாள், தொண்டமான், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் மிக இலகுவாக அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பார்கள்.
இதனைத் தவிர்ந்த இந்து வியாபாரத் துறையினரும் கோத்தபாய ராஜபக்சவின் கருத்துக்கள், தீர்மானங்கள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடு குறித்த அவதானமும் ஆவலும் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல கத்தோலிக்க மக்கள் எப்போதும் எமக்கு நூறுவீத வாக்குகளை இதுவரை அளித்திருக்கவில்லை. 25 அல்லது 30 சதவீத வாக்குகளே அளிக்கப்படுகின்றன.
ஆனாலும் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்திக்கொண்டு கத்தோலிக்க மக்களும் எமக்கு வாக்களிப்பார்கள்.
அதேபோல எப்போதும், எமக்கு வாக்களிக்காத முஸ்லிம் மக்களும் மௌலவிகளும் இம்முறை கோத்தாவுக்கே வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க போகும் தமிழர்கள்! கோத்தாவுடன், பிள்ளையான்,கருணா....
Reviewed by Author
on
September 26, 2019
Rating:

No comments:
Post a Comment