தமிழ் தின போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மன்/எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரி மாணிவிகள் கௌரவிப்பு-(படம்)
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் கதைப் பாடல் நிகழ்ச்சியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழு முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
குறித்த சாதனை புரிந்த மாணவிகளுக்கான மாபெரும் வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15/09/2019 பாடசாலை அதிபர் எம்.அஸ்மீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம். முஜாஹிர் கலந்து சிறப்பித்தார்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பிரதேச சபை உறுப்பினர் மகிசா, பள்ளி நிருவாகத்தினர், பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணிவிகளை கௌரவித்தனர்.
குறித்த மாணவிகள் குறித்த போட்டியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் மன்னார் கல்வி வலயத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தின போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மன்/எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரி மாணிவிகள் கௌரவிப்பு-(படம்)
Reviewed by Author
on
September 16, 2019
Rating:

No comments:
Post a Comment