தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது! சிறிநேசன் எம்.பி -
தமிழ் மக்களுக்குத் தேவையானது சுயநிர்ணய உரிமை என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும், உறுதியாக இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தியக தீபம் திலீபனின் 32வது நினைவு வணக்க நிகழ்வு மட்டக்களப்பு மண்டூர் - கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசியல் போராட்டம் என்பது பல்வேறு பரிணாமங்களைக் கொண்டது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் திர்வுக்காக ஆரம்பத்தில் அகிம்சை ரீதியாகவும் செயற்பட்டிருந்தது. அந்த அகிம்மைப் போராட்டத்திற்கு பேரினவாத அரசு மரியாதையளிக்கவுமில்லை, அதற்குரிய தீர்வையும் தரவில்லை.
பின்னர் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள் மூலமாக தீர்வுக்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1957இல் பண்டா, செல்வா ஒப்பந்தமும், 1965இல் டட்லி, செல்வா ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டன.
இவற்றினைவிட 1980களில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் மூலமாக தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யப்பட்டன.
இந்நிலையில்தான் எந்த ஒப்பந்தமும் செல்லாக் காசாக மாறியதன் காரணமாகத்தான் அடுத்த பரிணாமமாக ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆயுதப்போராட்டம் அடக்குமுறைக்கு எதிராகவும், அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும்தான் இடம்பெற்றிருந்தது.
அது ஒழுக்க விழுமியமுள்ள போராட்டமாக சர்வதேசமே பாராட்டக்கூயடி அளவிற்கும், எதிரிகயாகவிருந்தவர்கள் கூட அவர்களது ஒழுக்கத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசும் அளவிற்கு, அமைந்திருந்தது.
அந்த வகையில்தான் ஆயுத ரீதியாக மாத்திரமின்றி அகிம்சை ரீதியாகவும் போராடுவோம் என போராடிக் காட்டியவர்தான் தியாக தீபம் திலிபன்.
இந்தியப் படைகளுடன் ஆயுத ரீதியான போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, இந்தியாவின் பாதையில் அகிம்சை ரீதியில் போராடக் காட்டுவோம் என்ற ரீதியில்தான் திலீபன் முன்வந்திருந்தார்.
தமிழன்னை முகம் நிமிர்த்தி திலகமிட முகமொலிக்கும் பார்தீபனவன், தேரோடும் வீதியிலே திகளோடும் ஓங்கிநிற்கும் செல்வனிவன், வீர நடைபோடும் சாவையா, சின்னவயதினிலே இது தேவையா? எரிமலை ஒன்று வெடிக்காதா எங்கள் பிள்ளை இன்னுயிர் பிளைக்காதா,என்ற வரிகளை அப்போது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் திலீபனுக்காக தெரிவித்திருந்தார். எனினும் அவரின் அகிம்சை ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளிக்காததனால் அவரின் உயிர் பிரிந்தது.
தியாக தீபம் திலீபனின் போராட்டம் வரலாற்றில் மறக்கமுடியாத போராட்டமாக உள்ளது. அவர் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவ பீட மாணவராக இருந்தும் கூட அதனை விட இந்தப்போராட்டம் பெரியது என நினைத்தார். அவரது போராட்டத்தை இலங்கை அரசாங்கத்திற்கோ, அருகிலுள்ள இந்திய அரசாங்கத்திற்கும் அது விளங்கியிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது! சிறிநேசன் எம்.பி -
Reviewed by Author
on
September 26, 2019
Rating:

No comments:
Post a Comment