பாகிஸ்தானில் வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி!
பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது.
நடந்த முடிந்த இரண்டு போட்டிகளிலும் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி வெற்றி பெற்றிருந்ததால், மூன்றாவது போட்டி பாகிஸ்தானிற்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்த நிலையில் லாஹூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஓஷாடா பெர்னாண்டோ 48 பந்துகளில் 78 ரன்களை குவிந்திருந்தார். இதில் 8 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். பாகிஸ்தான் அணி சார்பில், முகமது அமீர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம்(27), ஹரிஸ் சோஹைல் (50) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறி விட்டனர்.

இதனால் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதன்மூலம் சொந்த மண்ணில் வைத்தே பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெற்றி கண்டு இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தானில் வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி!
Reviewed by Author
on
October 10, 2019
Rating:
No comments:
Post a Comment