இலங்கை தமிழர்களுக்கு உதவிய பிரித்தானிய தாய் இந்தியாவில் சடலமாக மீட்பு! தவிக்கும் மகள்கள்
பிரித்தானியாவை சேர்ந்த ஜூலி ஆன் வார்னர் (40) என்பவர் தன்னுடைய நண்பர்கள் கேப்டன் ஃபைவ்ஹாட்ஸ், டொமினிக் ஆலிவர் போவர் மற்றும் ஸ்டூவர்ட் ஆலன் குலியம் ஆகியோருடன் 2017ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது சட்டவிரோதமாக பிரித்தானிய செல்ல ஆசைப்பட்ட, இலங்கை பிரஜைகளான அருணாசலம் சுதாகரன், கண்ணதாசன் கார்த்தீபன், கஜன் சந்திரபாலன் மற்றும் கவேந்தினி கந்தசாமி ஆகியோருக்கு உதவ முன்வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த குடிவரவு அதிகாரிகள் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆறு மாதத்திற்கு முன்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜூலி, நடந்துகொண்டிருக்கும் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஜூலி கோவாவுக்குச் சென்றதாகவும், தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தங்குமிடம் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28ம் திகதியன்று கோவா மாநிலத்தின் Calangute பகுதியில் ஒரு மரத்தில் ஜூலி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், பிரித்தானிய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்ததோடு, தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
பின்னர் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான காரணத்தை மூச்சுத்திணறல் மற்றும் பெருமூளை சிரை நெரிசல் என பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவருடைய மகள் கிரேஸ் மெக்நல்டி கூறுகையில், நீண்ட வருடங்களாக முடிவடையாமல் நடந்த வழக்கில் அவர் பெருகிய முறையில் விரக்தியடைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, என் அம்மா இந்தியாவில் வசித்து வந்தார். சமீபத்தில் சில பயங்கரமான பிரச்சினைகளை சந்தித்த பின்னர் வீடற்றவராக ஆனார்.

வெளிநாட்டில் தனியாக வாழ்ந்த அவருக்கு, வெளியில் செல்வதற்கு கூட யாரும் இல்லை. இங்கிலாந்து வீட்டிற்கு திரும்புவதற்கான வழியும் இல்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலினால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்.
ஏற்கனவே தந்தை இறந்த நிலையில் இப்போது நானும் எனது சகோதரியும் அம்மாவை இழந்து அனாதையாகிவிட்டோம் என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த துன்பகரமான நேரத்தில் இந்தியாவுக்கு பறந்து செல்வதற்கும் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வருவதற்கும் எல்லா உதவிகளும் ஆதரவும் தேவை" என ஆன்லைனில் நிதி திரட்டி வருகின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிய பிரித்தானிய தாய் இந்தியாவில் சடலமாக மீட்பு! தவிக்கும் மகள்கள்
Reviewed by Author
on
October 10, 2019
Rating:
No comments:
Post a Comment