தமிழகத்தில் தொடரும் அவலம்! மற்றுமொரு சிறுவன் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து மரணம் -
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் மனைவி நேத்ராதேவி, மூத்த மகன் கோவிந்தனுடன் ஓ.கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.
இவரது இளைய மகன் ருத்ரன்( வயது 3) ஒண்டிப்புலிநாயக்கனுாரில் உள்ள தனது தாத்தா மணிகண்டன் வீட்டில் வளர்ந்து வந்தார்.
இந்நிலையில், காலையில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் வீட்டின் முன் கட்டப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்தார்.
மழையால் தொட்டியில் நீர் நிரம்பி இருந்ததால் இதில் மூழ்கினார். ருத்ரனை தேடிய உறவினர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் இருப்பதை கண்டனர்.
உடனடியாக மீட்டு ஆமத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
எனினும், அதிகப்படியாக தண்ணீர் குடித்ததால் மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஆமத்துார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுவன் உயரிழப்பை ஏற்படுத்திய மழைநீர் சேகரிப்பு தொட்டி 5 அடி ஆழம் கொண்டது என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 25ம் திகதி திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயதான சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பமொன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தொடரும் அவலம்! மற்றுமொரு சிறுவன் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து மரணம் -
Reviewed by Author
on
October 31, 2019
Rating:

No comments:
Post a Comment