சுற்றுசூழல் விருதை ஏற்க மறுத்த கிரெட்டா துன்பெர்க் -
இளம் காலநிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காலநிலை மாற்றம் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.
வெறும் 15 வயதில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே அவர் ஆரம்பித்த போராட்டம், இன்று உலகம் முழுவதிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அவரது செயலை பாராட்டி ஸ்டாக்ஹோமில் நடந்த ஒரு விழாவில், 2019 ஆம் ஆண்டிற்கான நோர்டிக் கவுன்சிலின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டது.
கிரெட்டாவின் சொந்த நாடான ஸ்வீடன் உட்பட நோர்டிக் நாடுகளில் இருந்து 87 உறுப்பினர்களைக் கொண்ட சபை அவரை தேர்ந்தெடுத்திருந்தது.
கலிபோர்னியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் விழாவில் கலந்துகொள்ள முடியாத கிரெட்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு நீண்ட இடுகையை பதிவிட்டிருந்தார். அதில், நான் நோர்டிக் கவுன்சிலின் 2019ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதைப் பெற்றுள்ளேன். இந்த பரிசை நிராகரிக்க முடிவு செய்துள்ளேன். இந்த விருதுக்கு நான் நோர்டிக் கவுன்சிலுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இது ஒரு பெரிய மரியாதை.
ஆனால் காலநிலை இயக்கத்திற்கு விருதுகள் தேவையில்லை. நமக்குத் தேவையானது நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தற்போதைய, கிடைக்கக்கூடிய சிறந்த அறிவியலைக் கேட்கத் தொடங்குவது தான் என ஆரம்பித்து, காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து நோர்டிக் நாடுகள் தற்பெருமை கொள்வதாக விமர்சனம் செய்துள்ளார்.
சுற்றுசூழல் விருதை ஏற்க மறுத்த கிரெட்டா துன்பெர்க் -
Reviewed by Author
on
October 31, 2019
Rating:

No comments:
Post a Comment