62 பேர் பலி.. 100பேர் படுகாயம்! தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்:
ஆப்கானிஸ்தானின் ஹஸ்கா மேனா மாவட்டத்தின் ஜவ்தாரா பகுதியில் உள்ள மசூதியில் இன்று தொழுகை நடந்துகொண்டிருந்த போது தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் 62 பேர் பலியாகியிருபப்தாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் கிளர்ச்சியாளர்களை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான படைகள் 2001 ல் வெளியேற்றப்பட்ட பின்னர் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த போராடுகிறார்கள் எனவும் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில், கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 4,313 பொதுமக்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
62 பேர் பலி.. 100பேர் படுகாயம்! தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்:
Reviewed by Author
on
October 19, 2019
Rating:

No comments:
Post a Comment