6,370 கி.மீ தூரத்தில் இருந்து 6 இந்தியச் சிறுமிகளை காப்பாற்றிய வீரமங்கை: யார் இந்த மாணவி ஜெய்ரா -
அக்டோபர் 18, 2019 அன்று, அதாவது இன்று, ராஜஸ்தானின் புஷ்கரில் ஆறு சிறுமிகள் பெற்றோர்களால் குழந்தைத் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் 6,370 கி.மீ தூரத்தில் வசிக்கும் 24 வயதான ஜெய்ரா சோனா சின் திருமணத்தை நிறுத்தி சிறுமிகளை மீட்டுள்ளார்.
ராஜஸ்தானின் நாட் சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமிகள் பள்ளிக்குச் சென்று சொந்த காலில் நிற்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஜெய்ரா கூறியுள்ளார்.
ஹாலந்தைச் சேர்ந்த ஜெய்ரா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா குறித்த சர்வதேச மேம்பாட்டு ஆய்வுகள் படித்து வருபவர், பல ஆண்டுகளாக ராஜஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.
2016 முதல், அவர் 16 முறை மாநிலத்திற்கு சென்றுள்ளார். ராஜஸ்தானில், ஜெய்ரா உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார், மேலும் குழந்தைகளுக்கு பள்ளியில் சேர வாய்ப்புகள் வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். புஷ்கரில் கிட்டத்தட்ட 40 மாணவர்களின் கல்விக்கு அவர் நிதியுதவி அளிப்பதாக கூறப்படுகிறது.
சிறுமிகளின் திருமணம் குறித்து புஷ்கரில் உள்ள நண்பர்கள் ஜெய்ராவுக்கு தகவல் அளிக்க,இந்தியாவில் குழந்தை உரிமைகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான CRY-யை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் உள்ளுர் பொலிசில் புகார் அளிக்க தகவல்களின் பேரில், பொலிசார் ஞாயிற்றுக்கிழமை தேடல்களை மேற்கொண்டுள்ளனர் மற்றும் தகவல் உண்மை என்று கண்டறிந்துள்ளனர். சிறுமிகளின் குடும்ப உறுப்பினர்களை ரகசியமாக திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்களா என்று அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
ஜெய்ரா முதன்முதலில் தனது தாயுடன் 2016 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார், மேலும் புஷ்கருக்கும் விஜயம் செய்துள்ளார்.
நாட் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தெருக்களில் பிச்சை எடுப்பதைக் கண்ட அவர். அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமாக இருப்பதை கண்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஹாலந்தில் இருந்து புஷ்கருக்குத் திரும்பிய ஜெய்ரா, புஷ்கரில் உள்ள குழந்தைகளுக்கு அவர் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து சிந்தித்துள்ளார்.
ஜவஹர் என்ற உள்ளூர் பள்ளியின் நிர்வாகத்தை அணுகிய அவர், நாட் சமூகத்தைச் சேர்ந்த 40 குழந்தைகளைச் சேர்க்கும்படி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
ஜவஹர் பள்ளியின் முதல்வர் கிரிராஜ் குஜாரியா கூறியதாவது, 40 மாணவர்களின் கல்விக் கட்டணம், உணவு மற்றும் சீருடைக்கான செலவுகளை ஜெய்ரா ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஜெய்ரா விரைவில் எங்களை சந்திக்கவுள்ளார், நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்த ஆறு சிறுமிகளின் குடும்பங்களையும் பார்வையிட்டு அவர்களை படிக்க அனுமதிக்கும்படி வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.
ஜெய்ராவுக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்தியாவுடன் தொடர்பு உள்ளது. அவரது தாய்வழி தாத்தா பீகாரைச் சேர்ந்தவர். பின்னர் அவரது குடும்பத்தினர் சுரினாமிற்கு குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6,370 கி.மீ தூரத்தில் இருந்து 6 இந்தியச் சிறுமிகளை காப்பாற்றிய வீரமங்கை: யார் இந்த மாணவி ஜெய்ரா -
Reviewed by Author
on
October 19, 2019
Rating:

No comments:
Post a Comment