எலியின் மூளையின் இழையத்தை ஆய்வுகூடத்தில் பாதுகாத்து விஞ்ஞானிகள் சாதனை
இந்த வரிசையில் தற்போது எலியின் மூளையிலுள்ள இழையத்தினை சுமார் 25 நாட்கள் வரை உயிருள்ள நிலையில் ஆய்வுகூடத்தில் வைத்து பாதுகாத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு சில நாட்களுக்கு இவ்வாறு பாதுகாக்க முடிந்துள்ள நிலையில் தற்போது வாரக்கணக்கில் பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றமை மருத்து உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
Microfluidic எனும் சாதனத்தில் வைத்தே இந்த இழையம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
குறித்த சாதனமானது இழையத்திற்கு விசேட திரவம் ஒன்றினை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்துடன் ஆய்வினை நிறுத்திவிடாது தொடர்ந்து 100 நாட்களுக்கு மூளையின் இழையத்தை பாதுகாத்து வைக்கக்கூடிய தொழில்நுட்பம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எலியின் மூளையின் இழையத்தை ஆய்வுகூடத்தில் பாதுகாத்து விஞ்ஞானிகள் சாதனை
Reviewed by Author
on
October 20, 2019
Rating:

No comments:
Post a Comment