உடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் மதிவதனி... அழகான காதல் கதை -
தமிழீழம் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரனுக்கும், அவரது மனைவி மதிவதனிக்கும் போர்களத்தில் தான் காதல் மலர்ந்துள்ளது.
1983 ல் நடைபெற்ற ஜூலை படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.
அதில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு இடம்பெயர்ந்த மாணவர்கள் கேட்டனர்.
ஆனால் அதனை அரசு நிராகரித்தது, இதனால் மாணவர்களிடையே மிகப்பெரிய போராட்டம் வெடிக்க நேரிடும் என்று கருதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட, நான்கு மாணவிகள் உட்பட ஒன்பது மாணவர்கள் ஜனவரி 9 1984ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர்.

ஆனால், இதை அரசு கண்டுகொள்ளாத நிலையில், அன்று இரவே மாணவர்கள் காணாமல் போக, மாணவர்களின் உண்ணாநிலை புலிகள் பாசறையில் முடிக்கப்பெற்று, ஒன்பது மாணவர்களும் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்படி படகின் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் மதிவதனி.
சென்னையில் தங்கவைப்பட்டிருந்த மதிவதனி, ஹோலிப்பண்டிகையின் போது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்ற, அதற்கு பிரபாகரன் கடிந்து கொள்ள, மதிவதனி அழ ஆரம்பித்தார்.
பின்னர் அன்டன் பாலசிங்கத்துடன் பேசிவிட்டு செல்லும் போது அவரை சமாதானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
இதையடுத்து இருவருக்குமான காதல் மலர்ந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மதிவதனியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.
அக்டோபர் 1ம் தேதி 1984ல் அவர்களது திருமணம் நடைபெற்றது. மதிவதனி மற்றும் பிரபாகரனின் உடல் வேறாயினும் உயிர் ஒன்றாகவே இணைந்து இருந்திருந்தனர். இருவரின் காதலும் போராட்டத்துடன் இணைந்து நின்றது.
உடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் மதிவதனி... அழகான காதல் கதை -
Reviewed by Author
on
October 12, 2019
Rating:
No comments:
Post a Comment