உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை.. வெண்கலம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை மேரிகோம்!
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவின் Ulan-Ude நகரில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், துருக்கி வீராங்கனை Buse Cakirogluவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் மேரி கோம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவர் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இது அவருக்கு 8வது பதக்கம் ஆகும். மேரி கோம் இதுவரை உலக குத்துச்சண்டைப் போட்டியில் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
இந்நிலையில், வெண்கலம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை.. வெண்கலம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை மேரிகோம்!
Reviewed by Author
on
October 12, 2019
Rating:
No comments:
Post a Comment