மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு துணைத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு-படம்
மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் துணை தூதுவர் அன்றீஸ் பேர்க் (ANDREAS BEAG) ஆகியோருக்கு இடையில் இன்று வியாழக்கிழமை(10) காலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது ஜர்மன் நாட்டு தூதரகத்தின் வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் தர்னி தலுவத்த (DHARINI DALUWATTE) கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.
-குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்பொதைய நிலமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தூதரக அதிகாரிகள் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
இதன் போது ஜர்மன் நாட்டு தூதரகத்தின் வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் தர்னி தலுவத்த (DHARINI DALUWATTE) கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.
-குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்பொதைய நிலமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தூதரக அதிகாரிகள் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு துணைத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு-படம்
Reviewed by Author
on
October 10, 2019
Rating:

No comments:
Post a Comment