மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழ-video,photoes
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவையின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (29)காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சரஸ்வதி மோகநாதன் கலந்து கொண்டார்.
காலை 9.45 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து தமிழர் பண்பாட்டு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் நகர மண்டபத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஜனாப் மக்கள் காதர் அரங்கில் நிகழ்வுகள் இடம் பெற்றது.மங்கள இசை மற்றும் நிகழ்வுகள் இடம் பெற்றது.அதனைத் தொடர்ந்து 'மன்னெழில்' சிறப்பு மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தார்.மேலும் நாடகம்,நடனம்,சிறப்பு பட்டி மன்றம் போன்றவை இடம் பெற்றது.அதனைத்தொடர்ந்து தேசிய விருது பெற்றவர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் சர்வமத தலைவர்கள், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு,மடு அகிய 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பாடசாலை மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
October 30, 2019
Rating:

No comments:
Post a Comment