மன்னார் பன்னவெட்டுவன் தொழிநுட்பவியல் கல்லூரி தொழில் பயிற்சி கருத்தரங்கு-படங்கள்
மன்னார் பன்னவெட்டுவன் தொழிநுட்பவியல் கல்லூரி
19/10/2019 நிகழ்வு 2019ம் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் புதிதாக கல்லூரிக்கு நியமனம் பெற்ற அதிபர் பிரேமரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது முதல் நிகழ்வாக விரிவுரையாளர் நிர்மலன் அவர்களினால் வரவேற்புரை ஆற்றப்பட்டது. அதனை தொடர்ந்து விரிவுரையாளர் விமலேஸ்வரன் அவர்களினால் சிறப்புரை ஆற்றப்பட்டது. அடுத்த நிகழ்வாக எமது தொழிநுட்பவியல் கல்லூரிக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர் பிரேமரஞ்சன் அவர்களினால் தொழில் பயிற்சிகள் சம்பந்தமான கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்றது. முதல் தெரிவாக செயலாளர் தெரிவு இடம்பெற்றது. செயலாளராக வாகீசன் உபதலைவராக பிரைற்றன் பொருளாளராக பிரியங்கா போசகர்களாக விரிவுரையாளர்கள் பொறியியலாளர் விமலேஸ்வரன், பொறியியலாளர் அருளொளிப்பவன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பின்னர் ஒவ்வொரு பாடநெறிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய பழைய மாணவர் சங்க செயலாளரினால் நன்றியுரை ஆற்றப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவேறியது.

Reviewed by Author
on
October 20, 2019
Rating:

No comments:
Post a Comment