மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்ப கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்
மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பகல்லூரிக்கு நிரந்தரமான அதிபர் இல்லாமையினால் கற்றல் செயல்பாடுகளில் மந்த நிலைகாணப்பட்டது.
21-05-2019 அன்றுடன் ஓய்வுபெற்றுச்சென்றுள்ள கணபதிப்பிள்ளை செந்தில்வேற்பிள்ளை போதனாசிரியர் மின்இந்திரவியல்
SLTES-அவர்களுக்கு பின்பு தற்போது வவுனியா தொழிநுட்பகல்லூரியின் அதிபராக கடமையாற்றுகின்ற திரு.A.நற்குணேஸ்வரன் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் வருகைதரும் அதிபராக கடமையாற்றி வந்த வேளையில் மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்ப கல்லூரிக்கு புதிய அதிபராக சரியாக 05 மாதங்களுக்கு பின் திரு.கதிரமலை பிறேமறஞ்சன் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு 09/10/2019 புதன் கிழமை காலை இடம்பெற்றது.
புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.க.பிறேமறஞ்சன் அவர்கள் மன்னார் மவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை கற்றலின் மூலம் வெளிக்கொணர்ந்து பிரகாசமான வாழ்வுக்கு வழியமைக்கும் இந்த பன்னவெட்டுவான் தொழிநுட்ப கல்லூரிக்கு என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பன்னவெட்டுவான் தொழிநுட்ப கல்லூரி அதிபர் இல்லாமல் இயங்கிய தகவலை வெளியிட்டு இருந்தது. நியூமன்னார் இணையம்
மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்ப கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்
Reviewed by Author
on
October 11, 2019
Rating:

No comments:
Post a Comment