ஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் பிரபல பாடகர் டீஜே ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அவர் தனுஷின் மகன் ரோலில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.
இந்த படத்தை தொடர்ந்து டீஜே தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்திற்காக தொடர்ந்து 2 மாதங்களாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் எந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெரிவிக்கவில்லை.
கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில் சிலர் டீஜே நடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கலாம் என தெரிவித்தனர்.
அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம்58 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு
Reviewed by Author
on
November 18, 2019
Rating:

No comments:
Post a Comment