நாம் ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர் தோற்றுவிடக்கூடாது! சி.வி.விக்னேஸ்வரன் -
“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக 3 தினங்களுக்குப் பின்பே தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்.”
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு தெரிவித்த வேட்பாளர் வெற்றிபெறாமல் போனால் எமக்கு சிரமமாக இருக்கும்.
ஆகையினாலேயே மக்களை சிந்தித்து வாக்களிக்க கோரினோம் . ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை பரிசீலித்து வருகிறோம்.
அடுத்த 3 நாட்களில் அதனை ஆராய்ந்து சரியான தீர்மானத்தை அறிவிப்போம். வேட்பாளர்களின் அறிக்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற மொழிகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம் என்பதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது..
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளபோதும் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்களை வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டோம.
எந்த வேட்பாளர்கள் தங்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அவர்களுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கோரலாம் என்ற நோக்கோடே இந்த தீர்மானத்தை எடுத்தோம்” என கூறியுள்ளார்.
நாம் ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர் தோற்றுவிடக்கூடாது! சி.வி.விக்னேஸ்வரன் -
Reviewed by Author
on
November 02, 2019
Rating:

No comments:
Post a Comment