ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
தேர்தல் விதிகளை மீறி செயற்படும் ஊடகங்களால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திச்சேவை அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவேவவை தொடர்புகொண்டபோது,
இன்று நள்ளிரவு முதல் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெறுகின்றன.
அதனை தொடந்து தேர்தலுக்கு எஞ்சியிருக்கின்ற 48 மணிநேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரையேனும் ஆதரிக்கும் வகையிலோ, அல்லது நிராகரிக்கும் வகையிலோ எந்தவொரு ஊடக நிறுவனமும் செயற்பட்டாலோ, தேர்தல் விதிகளை மீறினாலோ தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்காக அவ் ஊடக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி இரத்துச செய்யப்படுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களை அறிவுறுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
Reviewed by Author
on
November 13, 2019
Rating:

No comments:
Post a Comment