மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கில் இடம் பெற்ற செபமாலைப் பேரணி.படம்
செபமாலை அன்னையின் விசேட மாதமான ஜப்பசி மாதத்தின் இறுதி நாளாகிய நேற்று வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட செபமாலை பேரணியானது நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மரியன்னை ஆலயத்தில் விசேட திருப்பலியுடன் ஆரம்பமானது.
இத்திருப்பலியானது அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஒழுங்குப்படுத்தலின் கீழ் அருட்தந்தை தேவசாகாயம் அடிகளார் தலமையில் அருட்தந்தை சவுல் நாதன் அடிகளார், அருட்தந்தை ஜெஸ்மன் ராஜ் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி முடிவில் செபமாலை பேரணியானது தலைமன்னார் பிரதான வீதி வழியாக செபமாலை ஒப்புக்கொடுக்கப்பட்டு மன்னார் பஸ் தரிப்பு நிலயத்திற்கு அருகாமையில் உள்ள மருதமடு தாயாரின் திருச்சுருபத்திற்கு முன்னால் அருட்பணி கரோப் அடிகளார் செபமாலையின் முக்கியத்துவம் என்ற கருப்பொருளில் மறையுரையினை இறை மக்களுக்கு வழங்கினார்.
மறையுரை முடிவில் மீண்டும் பவனியானது மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக சென்று பேராலயத்தை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர்சோசை அடிகளாரினால் அன்னையின் திருச்சொரூப ஆசீர் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.
இச் செபமாலை பேரணியில் பேராலய பங்குத்தந்தை, உதவி பங்குத்தை, குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், ஆண்கள் தோழமை குழுவினர், பாடசாலை மாணவ மாணவிகள், பங்கு மக்கள் அணைவரும் ஒன்றிணைந்து பேரணியை சிறப்பாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
November 01, 2019
Rating:

No comments:
Post a Comment