கனடாவின் பீல் பிராந்திய புதிய பொலிஸ் தலைவர் துரையப்பாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு -
நூற்றுக்கணக்கான சக பொலிஸார், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழாவில் பீல் பிராந்திய பொலிஸார், அதன் புதிய தலைவரான நிஷான் துரையப்பாவுக்கு வரவேற்பை வழங்கியுள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள நிஷான் துரையப்பா,
"பீல் பிராந்திய பொலிஸின் புதிய தலைவராக இணைந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிராந்திய பொலிஸ் துறை அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பாளர்களைக் கொண்டுள்ள அமைப்பு. அவர்கள் தினமும் சிறந்த சேவையை செய்து வருகின்றனர். பீல் பிராந்தியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கான முயற்சிகளை சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிஷான் துரைப்பா, இலங்கையில் பிறந்து கனடாவுக்கு குடியேறியவர். கடந்த 1995 டிசம்பர் மாதம் ஹால்டன் பிராந்திய பொலிஸில் தனது சேவைரய ஆரம்பித்தார். ரோந்து, ஒழுக்கம், துப்பாக்கிகள் மற்றும் வன்முறை குழுக்கள் போன்ற பிரிவுகளில் பல ஆண்டுகள் பணியாற்றினார். ஆர்.சி.எம்.பி ஒருங்கிணைந்த படைப் பிரிவின் சிறப்பு அமுலாக்க பிரிவுகளை கொண்டுள்ளது.
மில்டன் மற்றும் ஹால்டன் ஹில்ஸ் ஆகியவற்றின் அபிவிருத்தி மற்றும் மூலோபாய முகாமைத்துவ அலுவலகத்தின் (OCISM) கமாண்டாராக கடமையாற்றியதுடன் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றினார். இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு நான்கு நகர சபைகள், மற்றும் ஏனைய சில பிரிவுகளின் துணை தலைவராக பதவி உயர் வழங்கப்பட்டதுடன் மாவட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
நிஷான் துரையப்பா, டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டமும், மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார்.
துரைப்பா ஒன்ராறியோ பொலிஸ் தலைவர்கள் சங்கத்தின் (OACP) பணிப்பாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார். மேலும் 2012 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் II வைர விழா பதக்கத்தைப் பெற்றவர் மற்றும் 2016 ஆம் ஆண்டில் Order of Merit உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
கனடாவின் பீல் பிராந்திய புதிய பொலிஸ் தலைவர் துரையப்பாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு -
Reviewed by Author
on
November 01, 2019
Rating:

No comments:
Post a Comment