பிரித்தானியாவில் புகலிடம் கோரும் தமிழர்கள்! இலங்கையில் குடும்பத்தினர் மீது தாக்குதல் -
பிரித்தானியாவில் புகலிடம் கோரும் தமிழர்களின், குடும்பங்களின் மீது தாக்குதல் இலங்கையில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பிரித்தானியாவில் புகலிடம் கோரும் தமிழர்களின், குடும்பத்தினர்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. சில நேரங்களில் உடல் ரீதியாகவும் தாக்கப்படுகின்றனர்.
மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின், வடக்கில் இருந்து பிரித்தானியாவில் புகலிடம் கோரி சென்றவர்கள், அங்குள்ள ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்றனர்.
இதனையடுத்து, இலங்கையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அத்துடன், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்கின்றனர்.
பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரி சென்றுள்ள 26 தமிழ் புகலிட கோரிக்கையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் அப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பல நேரங்களில், பிரித்தானியாவில் தமிழர்கள் அடையாள பேரணிகள் நடத்தும் புகைப்படங்கள் புகலிடக்கோரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு காட்டப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் புகலிடம் கோரும் தமிழர்கள்! இலங்கையில் குடும்பத்தினர் மீது தாக்குதல் -
Reviewed by Author
on
November 01, 2019
Rating:
Reviewed by Author
on
November 01, 2019
Rating:


No comments:
Post a Comment