ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர்! உத்தியோகபூர்வமாக அறிவிப்பு -
ஐ.எஸ். ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அந்த இயக்கத்தின் புதிய பேச்சாளர் இன்றிரவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐ.எஸ். ஐ.எஸ் இயக்கத்துக்குப் புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சவூதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் பேச்சாளர் அபூ ஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும், இயக்கத்தின் புதிய பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைமையைக் கொன்றமைக்காகச் சந்தோசப்பட வேண்டாமென்று அமெரிக்காவை எச்சரித்துள்ள அந்த இயக்கத்தின் புதிய பேச்சாளர், மத்திய கிழக்குக்கு வெளியேயும் தமது தாக்குதல்கள் தொடரும் எனவும் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அத்தோடு தமது இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பக்தாதியின் செப்டெம்பர் மாத இறுதி உரையின் பின் தொடர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர்! உத்தியோகபூர்வமாக அறிவிப்பு -
Reviewed by Author
on
November 01, 2019
Rating:

No comments:
Post a Comment