அண்மைய செய்திகள்

recent
-

சூரிய வெளிச்சத்திற்கு அஞ்சும் 12 வயது சிறுவன் -


சீனாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள விசித்திர வியாதி காரணமாக வாழ்நாள் முழுவதும் இனி சூரிய வெட்டத்தில் இருந்து விலகி இருக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சீனாவில் Xiao Luo என்ற 12 வயது சிறுவனால் பகலில் சூரிய வெளிச்சம் படும்படி நடமாட முடியாமல் போயுள்ளது.
சூரிய வெளிச்சம் பட்டால் கடுமையான வலியும், உடலில் கொப்புளங்களும் எரிச்சலும் ஏற்பட்டு வந்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு சிறுவனின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. சூரிய வெளிச்சம் பட்டதும், சிறுவனின் வாய், கண் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.
தற்போது சிறுவனின் ஆபத்தான நிலை கண்டு கவலையுற்ற தாயார், தமது மகனை காப்பாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவன் சியாவோ லூவோ மற்றும் அவரது குடும்பத்தினர் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பன்ஜிஹுவா நகரில் வசிக்கின்றனர்.

சிறுவனுக்கு இந்த விசித்திர நோய் இருப்பது சிறு வயதிலேயே தெரிய வந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள், இதுவெறும் தோல் வியாதி என்றே கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே சிறுவனின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிறுவனின் மூக்கில் இருந்து ரத்தம் வழியவும் தொடங்கியுள்ளது.
சில வேளையில் சிறுவனின் கண்களில் இருந்தும் வாயில் இருந்தும் ரத்தம் வழிந்துள்ளது. இதனால் பாடசாலைக்கு செல்லவும் முடியாமல் போயுள்ளது.
விரிவான மருத்துவ சோதனைக்கு பின்னர் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பில் தெரிவித்த மருத்துவர்கள், இது Porphyrias எனவும் 50,000 பேரில் ஒருவருக்கு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சியாவோ லூவோவின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது கல்லீரல் சேதமடைந்துள்ளது மற்றும் அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளது.
அவரது பிளேட்லெட்டுகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு மற்றும் அவரது சிவப்பு இரத்த அணுக்களின் அளவும் குறைந்து வருகிறது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவன் லூவோவுக்கு இதுவரை பலமுறை ரத்தமாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் குணமடைந்து தமக்கு பாடசாலை செல்ல வேண்டும் என சிறுவன் சியாவோ லூவோ நம்பிக்கை தெரிவித்துள்ளான்.
சூரிய வெளிச்சத்திற்கு அஞ்சும் 12 வயது சிறுவன் - Reviewed by Author on December 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.