கூகுள் தமிழர் சுந்தர் பிச்சைக்கு கிடைக்கவிருக்கும் புத்தாண்டு பரிசு .....
சான்பிரான்ஸ்சிஸ்கோ பங்குச்சந்தை ஆணையத்தில் ஆல்ஃபபெட் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆண்டுக்கு ரூ.14 கோடி(20லட்சம் டொலர்) ஊதியம் பெறுகிறார் என்று தகவல் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் சுந்தர் பிச்சை ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்த மாதத்தில் நியமிக்கப்பட்டார்.
சுந்தர் பிச்சை நியமனத்தை அங்கீகரிக்கும் வகையிலும், கவுரவப்படுத்தும் வகையிலும் அவருக்குப் பங்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், சுந்தர் பிச்சை கடந்த வியாழக்கிழமை 90 மில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகளை ஆல்ஃபபெட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர கூகுள் நிறுவனத்துக்குத் தொடர்ந்து பணியாற்றுவதை அங்கீகரித்து தனியாக 12 கோடி டொலரும் 2022 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோர் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்து, சுந்தர் பிச்சையை ஆல்ஃபபெட் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமித்தனர்.

இருப்பினும் லாரி பேஜ் மற்றும் பிரின் ஆகிய இருவரும் கூகுள், ஆல்ஃபபெட் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பிலும், இயக்குநர்கள் பொறுப்பிலும் இருப்பார்கள், அவர்களுக்குரிய பங்குகளும் தொடர்ந்து இருக்கும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் பல்வேறு டூல்பார்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
குறிப்பாகக் கூகுள் க்ரோம் செயலியை உருவாக்கி, மேம்படுத்தி, உலக அளவில் பிரபலமடையச் செய்தார் சுந்தர் பிச்சை
கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கூகுள் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் தமிழர் சுந்தர் பிச்சைக்கு கிடைக்கவிருக்கும் புத்தாண்டு பரிசு .....
Reviewed by Author
on
December 22, 2019
Rating:
No comments:
Post a Comment