பெண்ணாய் அவள் வாழ.....
பெண்ணாய் அவள் வாழ.....
பெண்ணால் பிறந்தவனே
உன்னால் பெண்கள் அழலாமா....
எல்லாம் முடியும் என்கிறாய்
உன்னால் தாயாக முடியுமா.....
அரணாய் இரு
வரணாய் இரு
ஆண்மகனாய் இரு
ஆனந்தம் கொள்ளு உன்னை சுமந்த கரு
கண்ணைத்திறந்து பாரு
பெண்ணால் இந்த பாரே
பெண்ணால் வந்த
உன்னால் எல்லாமே முடியுமென்றால்-அந்த
பெண்ணால் முடியாதா.......
அம்மா அக்கா தங்கை மனைவி
அத்தை சித்தி பாட்டி தோழி தந்தை
அத்தனையுமாகி அரவனைக்கும் அழகிய திரு
அண்டத்தின் அடிநாதக்கரு-ஆண்டவனின் மறு உரு
பெண் மனம் பூ மனம்
பெருமை கொள்ளட்டும் பெண்ணினம்
பெற்ற தாயும் பேறுகால மனைவியும்
பேருவகை கொள்ளட்டும் பெண்ணுள்ளம்
பெண்ணாய் அவள் வாழ
முன்னால் நீ வா தோழா
தன்னால் தரணிமாறும்
சொன்னால் புரியாதா....
உன்னால் முடியாதா.....
கவிஞர் வை.கஜேந்திரன்BA
பெண்ணால் பிறந்தவனே
உன்னால் பெண்கள் அழலாமா....
எல்லாம் முடியும் என்கிறாய்
உன்னால் தாயாக முடியுமா.....
அரணாய் இரு
வரணாய் இரு
ஆண்மகனாய் இரு
ஆனந்தம் கொள்ளு உன்னை சுமந்த கரு
கண்ணைத்திறந்து பாரு
பெண்ணால் இந்த பாரே
பெண்ணால் வந்த
உன்னால் எல்லாமே முடியுமென்றால்-அந்த
பெண்ணால் முடியாதா.......
அம்மா அக்கா தங்கை மனைவி
அத்தை சித்தி பாட்டி தோழி தந்தை
அத்தனையுமாகி அரவனைக்கும் அழகிய திரு
அண்டத்தின் அடிநாதக்கரு-ஆண்டவனின் மறு உரு
பெண் மனம் பூ மனம்
பெருமை கொள்ளட்டும் பெண்ணினம்
பெற்ற தாயும் பேறுகால மனைவியும்
பேருவகை கொள்ளட்டும் பெண்ணுள்ளம்
பெண்ணாய் அவள் வாழ
முன்னால் நீ வா தோழா
தன்னால் தரணிமாறும்
சொன்னால் புரியாதா....
உன்னால் முடியாதா.....
பெண்ணாய் அவள் வாழ.....
Reviewed by Author
on
December 22, 2019
Rating:

No comments:
Post a Comment