உலகில் வாழும் வயதான தம்பதியர் யார் தெரியுமா....
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகே இருக்கும், லான்ஹார்ன் கிராமத்தை சேர்ந்த தம்பதி
ஜான்(106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன்(105) .
இவர்கள் உலகில் வாழும் வயதான தம்பதி என்று கின்னஸ் சாதனை மூலம் அங்கிகரீக்கப்பட்டுள்ளது. கடந்த 1934-ஆம் ஆண்டு இருவரும்
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர்.
சார்லோட்டிடம் மலர்கொத்துடன் ஜான் தனது காதலை வெளிப்படுத்திய நிலையில், கடந்த 1939-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். திருமண உறவுகள் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக காலத்துக்கேற்ப நவீனமயமாதல், விட்டுக்கொடுத்தல் என்னும் தத்துவங்களை இவர்கள் கூறுகின்றனர்.
திருமணத்துக்கு பின்னர் இவர்கள் இருவரும் ஒருவர்மீது ஒருவர் செலுத்திய அன்பின் ஒட்டுமொத்த ஆயுள் 211 ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள். காலத்தின் சோதனைகளை கடந்த தெய்வீக காதல் என இலக்கியரசனையுடன் அமெரிக்க ஊடகங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
இத்தனை பெருமைக்குரிய இந்த தம்பதியருக்கு குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. அதை ஒரு மனக்குறையாகவே கருதாமல் இருவரும் 80 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் வாழும் வயதான தம்பதியர் யார் தெரியுமா....
Reviewed by Author
on
December 23, 2019
Rating:
No comments:
Post a Comment