`உன் தலைவன் யார்... நீ என்ன சீமான் கட்சியா?’ -இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்
இந்தியாவிலிருந்து வந்திருந்த இயக்குநர் களஞ்சியம், இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில், நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், இயக்குநர் களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்து இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு கடந்த 27ம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மு.களஞ்சியம் இலங்கைக்கு வந்திருந்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து விட்டு நாடு திரும்பும் வழியில்தான் இந்த கொடூர சம்பவத்திற்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோது, அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மறுப்பு வெளியிட்டுள்ளார்.
`உன் தலைவன் யார்... நீ என்ன சீமான் கட்சியா?’ -இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்
Reviewed by Author
on
December 11, 2019
Rating:

No comments:
Post a Comment