அண்மைய செய்திகள்

recent
-

முஷராப்பிற்கு மரணதண்டனையா? பாகிஸ்தான் இராணுவம் கொந்தளிப்பு! இம்ரான்கான் அவசர ஆலோசனை -


பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷராப்பிற்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இதற்கு பாகிஸ்தான் இராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பிரதமர் இம்ரான்கான் இது குறித்து கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியும், முன்னாள் ஜனாதிபதியான பர்வேஸ் முஷராப் மீது தேசத்தூரோக வழக்கு போடப்பட்ட நிலையில், அந்த வழக்கில் முஷாராப்பிற்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவு குறித்து அந்நாட்டின் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், முன்னாள் இராணுவ தளபதியாக, முப்படை தலைவராக, நாட்டின் ஜனாதிபதியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு சேவை செய்து, பல போர்களில் ஈடுபட்டவர் நிச்சயமாக தேசத் துரோகியாக இருக்க முடியாது.
இந்த முடிவு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக அவசர கதியில் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி நீதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் இராணுவம் விரும்புவதாக தெரிவித்தார்.

முஷாரப்பிற்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்ட போது, பிரதமர் இம்ரான்கான் அங்கு இல்லை, ஜெனிவாவில் நடந்த நடந்த உலக அகதி அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இம்ரான்கானின் உதவியாளரான பிர்தோஸ் ஆஷிக் அவான், இராணுவத்தின் கருத்தை அறிந்த பின் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடு திரும்பிய பிரதமர் இம்ரான் கான் தனது தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் அவசர கூட்டத்தை இஸ்லாமாபாத்தில் நேற்று கூட்டியுள்ளார்.
அதில், முஷராப் மீதான தீர்ப்பு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்தை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இம்ரான்கான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு விசாரணை நடத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அவரது பழைய பேட்டிகள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதனால் இந்த தண்டனை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுமா ? இது குறித்து இம்ரான்கான் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதற்கிடையில் துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷராப் , இது சொந்த பகை காரணமாக கொடுக்கப்பட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முஷராப்பிற்கு மரணதண்டனையா? பாகிஸ்தான் இராணுவம் கொந்தளிப்பு! இம்ரான்கான் அவசர ஆலோசனை - Reviewed by Author on December 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.