பிரான்சில் 2019-ஆம் ஆண்டு எத்தனை பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வெளியான அதிரவைக்கும் தகவல் -
பிரான்சின் Guyana-வில் இருக்கும் Saint-Laurent-du-Maroni-ல் பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுகிடந்தார்.
உயிரிழந்த அந்த பெண், பிரான்சில் இந்த ஆண்டில் குடும்ப வன்முறையால் உயிரிழந்த 122-வது பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிரான்ஸ் முழுவதும் 121 பெண்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போதும் அதே நிலை நீடிப்பதால், பெண்களின் பாதுகாப்பு அமைப்புகள் கடும் ஆத்திரத்தில் உள்ளன.
குறிப்பாக Nous Tous எனும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு இதற்கு பலத்த கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் பெண்கள் பெரும்பாலும் கணவர், முன்னாள் கணவர், காதலன் மற்றும் முன்னாள் காதன் ஆகியோரால் தான் கொல்லப்படுவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் 2019-ஆம் ஆண்டு எத்தனை பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வெளியான அதிரவைக்கும் தகவல் -
Reviewed by Author
on
December 19, 2019
Rating:

No comments:
Post a Comment