உலகில் ஒக்சிஜன் வாயுவிற்கு ஏற்பட்டிருக்கும் நிலை -
">தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்கள் காரணமாக கடல் நீரில் காணப்படும் ஒக்சிஜன் வாயு குறைவடையும் நிலை தோன்றியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் கடல் நீரில் காணப்படும் ஒக்சிஜன் வாயு பாரிய அளவில் குறைவடைந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உலகில் 700 கடல் பிராந்தியங்களில் குறைந்த ஒக்சிஜன் வாயுவே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகில் ஒக்சிஜன் வாயுவிற்கு ஏற்பட்டிருக்கும் நிலை -
Reviewed by Author
on
December 08, 2019
Rating:

No comments:
Post a Comment