இலங்கை 12 ஆண்டுகளாக ஜெயிக்கவில்லை... மோசமான சாதனை: எந்த அணியுடன் தெரியுமா?
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான 16 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இலங்கை அணியின் தேர்வு குழு அறிவித்தது.
இலங்கை அணி, கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பளே தலைமையிலான இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. அதன் பின் நடந்த 18 தொடர்களான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் இலங்கை தொடரை இழந்துள்ளது.
இதில் 5 டெஸ்ட் தொடரில் நான்கில் இந்தியாவும் ஒன்று டிராவும் ஆகியுள்ளது. 7 ஒருநாள் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஆறு டி20 தொடர்களில் இந்திய அணி 5 தொடர்களில் வெற்றியும், ஒரு தொடரை டிரா செய்துள்ளது.
இதனால் 18 தொடர்களில் 12 ஆண்டுகளாக இந்தியாவிடம் இலங்கை தோல்வியை சந்தித்து வருவதால், அந்த மோசமான சாதனையை நடைபெறவிருக்கும் டி20 தொடரில் முற்றுபுள்ளி வைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நாளை மறு தினம் நடைபெறவுள்ளது. தற்போது இருக்கும் இலங்கை அணியை பொறுத்தவரை மலிங்காவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அந்தளவிற்கு அனுபவமில்லாதவர்களாக உள்ளதால், இந்த முறையும் இந்த அணி தான் வெல்லும் என்று கூறப்படுகிறது.
இலங்கை 12 ஆண்டுகளாக ஜெயிக்கவில்லை... மோசமான சாதனை: எந்த அணியுடன் தெரியுமா?
Reviewed by Author
on
January 05, 2020
Rating:

No comments:
Post a Comment