அமெரிக்காவை மிரட்டும் கொடிய மர்ம வியாதி: இதுவரை 17 பேர் பலி, 540-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு -
சீனாவின் யுஹான் நகரில் நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதவரை 540 பேருக்கு இந்த கொடிய வியாதியின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேர் இந்த வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வியாதி தாக்குதல் காரணமாக இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளதாக புதனன்று வெளியான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யுஹானில் இருந்து வாஷிங்டன் வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவரெட் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் அவர் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்காவது இந்த வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியப்பட்ட வுகான் நகரிலேயே பாதிக்கப்பட்ட பலரும் பலியாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
வைரஸ் 540 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பலி எண்ணிக்கை 17 என உயர்வடைந்து உள்ளது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு மர்ம வியாதி தாக்குதலில் சீனாவில் மட்டும் 800 பேர் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை மிரட்டும் கொடிய மர்ம வியாதி: இதுவரை 17 பேர் பலி, 540-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு -
Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment