கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்தில் பலி -
கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய இளம் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை, கண்டி - கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் குறித்த இளம் பெண்ணும் அவரது கணவரின் சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கடந்த 6ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த 26 வயதான பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மெதவல பிரதேசத்தை குறித்த பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் டுபாய் சென்றுள்ளார். அதற்கமைய 19ஆம் திகதி கணவனை விமானம் ஏற்றுவதற்காக மனைவி விமான நிலையம் சென்றுள்ளார்.
அடுத்த நாள் வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்துள்ளார். எனினும் வெளிநாடு சென்ற இளம் கணவனுக்கு தனது மனைவி உயிரிழந்த விடயம் இன்னமும் தெரிவிக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தின் பின் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், முச்சக்கரவண்டி ஒன்று கொள்வனவு செய்யும் முயற்சியிலும் கணவன் டுபாய் சென்றுள்ளார்.
எனினும் எதிர்பாராத நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்தில் பலி -
Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment