அண்மைய செய்திகள்

recent
-

போலி ஓட்டுநர் உரிமத்தால் ரத்து செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை


அலி ஹைதரி எனும் ஆப்கானியர் 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர். 2014ம் ஆண்டு இவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெற இவர் சமர்பித்த ஆப்கான் ஓட்டுநர் உரிமம் போலியானது எனத் தெரிய வந்துள்ளது. லாரி ஓட்டுநராக வேலைச் செய்ய இவர் ஓட்டுநர் உரிமம் பெற்றதாகவும், ஆப்கானில் இவருக்கு லாரி ஓட்டிய அனுபவம் இல்லை என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக, இவரது ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களிடம் பணம் கொடுத்து, போலியான ஆப்கான் ஓட்டுநர் உரிமத்தை பெற்றதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஹைதரி தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையத்திலிருந்து வெளியேறிய பிறகு வேலைத் தேடியதாகவும், அதற்கு ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டதால் இச்செயலில் ஈடுபட்டதாக ஹைதரி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஹைதரியின் ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து செய்யப்பட்ட நிலையில், நல்ல பண்பு இல்லாதவர் என்ற அடிப்படையில் குடியுரிமை தொடர்பான இவரது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Report by, Migration Correspondent,
AMWW

போலி ஓட்டுநர் உரிமத்தால் ரத்து செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை Reviewed by Author on January 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.