தந்தையால் மனம் உடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை! கைப்பற்றப்பட்ட உருக்கமான கடிதம் -
ஹட்டன் - திம்புள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ் பிரிவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் குடி பழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து அவர் சண்டை பிடிப்பதாகவும் உருக்கமான கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டே இந்த விபரீத முடிவை குறித்த யுவதி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையால் மனம் உடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை! கைப்பற்றப்பட்ட உருக்கமான கடிதம் -
Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment