மன்னார் நானாட்டான் இந்து முன்பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி உதவி வழங்கி வைப்பு.
மன்னார் நானாட்டான் இந்து முன்பள்ளியின் வளர்ச்சிக்காக யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான திருமதி ஜானகி சீர்மாறன் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்று திங்கட்கிழமை 13/01/2020 நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
-இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நானாட்டானில் உள்ள இந்து முன்பள்ளி கட்டிடத்தில் வைத்து முன்பள்ளி ஆசிரியர்களிடம் குறித்த நிதி வழங்கப்பட்டது.
கல்வியின் மூலமாகவே ஒரு சமூகம் வெற்றி பெற முடியும் என்பதனால் தனது சேவைகளை வசதி அற்ற முன் பள்ளிகளுக்கு வழங்கி வருவதாக திருமதி ஜானகி சீர்மாறன் தெரிவித்தார்.
இதன் போது நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரும் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நானாட்டானில் உள்ள இந்து முன்பள்ளி கட்டிடத்தில் வைத்து முன்பள்ளி ஆசிரியர்களிடம் குறித்த நிதி வழங்கப்பட்டது.
கல்வியின் மூலமாகவே ஒரு சமூகம் வெற்றி பெற முடியும் என்பதனால் தனது சேவைகளை வசதி அற்ற முன் பள்ளிகளுக்கு வழங்கி வருவதாக திருமதி ஜானகி சீர்மாறன் தெரிவித்தார்.
இதன் போது நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரும் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நானாட்டான் இந்து முன்பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி உதவி வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
January 13, 2020
Rating:

No comments:
Post a Comment