தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! பிரதமர் மஹிந்த பகிரங்க குற்றச்சாட்டு -
கடந்த நான்கு வருடங்களில் வடபகுதி தமிழ் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்கவோ, அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவோ ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தை அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. ஏனினும் தமிழர்களுக்கான காத்திரமான விடயங்கள் எதனையும் செய்யவில்லை.
தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு அவசியமாக இருந்தாலும் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விடை காண்பது அவசியமாகும். இதனால் அரசாங்கம் இந்த விடயம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
தமிழ் ஊடகங்கள் அரச எதிர்ப்பு செயல்முறையை முன்னெடுத்து வருகின்றன. இதனால் அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை தூரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனஅவர் கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும். தமிழ் மக்கள் அரசாங்கத்தோடு நெருக்கமாக செயற்படாமல் விட்டாலும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றன.
வட பகுதிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடபகுதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடபகுதி மக்களுக்கு அழுத்தங்கள் இன்றி வாழக் கூடிய சூழல் உருவாகி இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! பிரதமர் மஹிந்த பகிரங்க குற்றச்சாட்டு -
Reviewed by Author
on
January 15, 2020
Rating:

No comments:
Post a Comment