"பொங்கும் மங்களம் எங்கும் தங்குக " சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் வாழ்த்து
"பொங்கும் மங்களம் எங்கும் தங்குக "
அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என மன்னார் சிவபூமி இந்துக் குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பொங்கல் பொங்க நல்ல நேரம் பார்க்க வேண்டுமா?
என்ற கேள்வி அண்மை காலமாக உள்ள ஒரு கேள்வி? சிலர் முகநூல் மற்றும் இணைய தளங்களில் பொங்கும் நேரம் போடப்பட்டுள்ளது என கேட்கின்றனர் அதுபற்றி....நாம் சிந்திப்போமானால்
பொங்கல் வைப்பது அதிகாலை தொடங்கி காலை சூரிய உதயம் ,உதித்தவுடன் படையல் படைத்து வழிபாடு செய்வது.என்பது எமது காலம் காலமான சைவ மக்களின் மரபு சூரியன் உதித்தவுடன் படைத்து
சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும.
பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம் தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வரும் மரபு எம்முடையது இதில் நேரம் பார்த்து பொங்கும் பழக்கம் இல்லை .பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.,
சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!"
என்று உரக்கக் கூவுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து உண்டு மகிழ்வர் இவ் மகிழ்ச்சி எமது வாழ்விலும் எல்லோர் வாழ்விலும் எங்கும் பொங்கிட இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
"பொங்கும் மங்களம் எங்கும் தங்குக " சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் வாழ்த்து
Reviewed by Author
on
January 15, 2020
Rating:

No comments:
Post a Comment