மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு-படங்கள்
வட மாகாணம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளப் பாதிப்பினால் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் (1,000) குடும்பங்களுக்கான வெள்ள நிவாரண பொருட்கள் தைப்பொங்கலை முன்னிட்டு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிப்பத்கற்கான ஏற்பாடுகளை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ)மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் அதிகம் வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளான மன்னார்,வவுனியா,கிளிநொச்சி, முல்லைதீவு, ஆகிய மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கான ஆரம்ப கட்ட நிவாரணப் பொருட்கள் பொங்களுக்கு முன்பாக கையளிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதன் முதல் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் பேசாலை, துள்ளுக்குடியிருப்பு,தலைமன்னார் கிழக்கு தலைமன்னார் மேற்கு ,கட்டுக்காரன் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி,மா,சீனி,தேயிலை பருப்பு உட்பட தேவையான அத்தியாவசிய பொருட்கள் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
ஏனைய மாவட்டங்களுக்கான நிவாரண பொதிகள் இன்று மற்றும் நாளைய தினங்களில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காண நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் கிளிநொச்சி-சிவில் உரிமைகள் மன்றம் , வவுனியா-நீதிக்கான மக்கள் அமைப்பு , முல்லைத்தீவு-மனிதாபிமான த்திற்கும் ஒருங்கிணைந்த அபிவிருத்திக்குமான நிலையம் ஆகிய நிறுவனங்கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
January 14, 2020
Rating:

No comments:
Post a Comment