அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மத ரீதியாக சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் நிகழ்வு-படங்கள்

மத ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச சர்வமத குழுக் கூட்டம் இன்றைய தினம் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன்  பிராந்திய இணைப்பாளர் எம்.யூ.எம். உவைஸ் தலைமையில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

பன்மைத்துவம் மற்றும் நீதியின் ஆதிக்கம் ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் 'சமய சகவாழ்வை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற மத ரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு புறிந்துணர்வு மூலம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுக்கு சர்வ மதத் தலைவர்கள் , அரச அலுவலர்கள் கிராம அலுவலர்கள் சமூக பொலிஸ் உத்தியோகஸ்த்கர்கள் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர.;

குறித்த நிகழ்வில் அண்மைக்கலமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மத ரீதியான முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறாமல் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

குறித்த மன்னார் பிரதேச சர்வமத குழுவானது இம் மாதம் 20,21,22 திகதிகளில் பேருவெல சர்வமத குழுவினருடன்  நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.





மன்னாரில் மத ரீதியாக சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் நிகழ்வு-படங்கள் Reviewed by Author on January 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.