அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'ஸ்மார்ட் ஸ்ரீலங்கா' நிகழ்சித்திட்டம் வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு-(VIDEO,PHOTOS)-

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ் இளைஞர் யுவதிகளை நவீன யுகத்தினுல் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்மார்ட் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (7)   காலை 10 மணிக்கு மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் வைபவ ரீதியாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 கிராம ரீதியாக உள்ள இளைஞர்களை 'ஸ்மார்ட் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உள்வாங்கி எதிர் கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  இளைஞர் சேவை அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதி நிதிகளான ஜசோதரன், ஜோசப் நயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் இணையத் தளத்தின் செயலி மூலம் பதிவு செய்யப்படு எதிர் கால செயற்திட்டங்களில் இணைத்து கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.






மன்னாரில் 'ஸ்மார்ட் ஸ்ரீலங்கா' நிகழ்சித்திட்டம் வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு-(VIDEO,PHOTOS)- Reviewed by Author on January 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.