இலங்கையில் ஆண் வயிற்றில் குழந்தை : வைத்திய சாலையில் நடந்த பரபரப்பு சம்பவம் -
இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றிரவு (13/01/2020) வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த இளைஞனின் அடையாள அட்டை உட்பட அனைத்து தகவல்களும் ஆணின் பெயரிலேயே பதிவாகியிருந்தது.
வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரிகள் சோதனையிட்ட பின்னர், ஆண்கள் வோட்டுக்கு குறித்த இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு நேற்று இரவு வலி அதிகரித்ததால் சோதனையிட்ட வைத்தியர்கள், அவர் ஆண் பெயரிடப்பட்ட பெண் எனவும் குழந்தை பிரசவிக்க தயாராக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது குறித்த ஆண் தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் ( 26 வயது) எனவும், அவர் முச்சக்கர வண்டி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வைத்தியர்கள் அவரை பெண்கள் பிரிவில் அனுமதித்ததுடன் ஆண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணிற்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அவர் நீண்ட காலத்திற்கு முன்னர் தனது மார்பகங்களை சத்திரசிகிச்சை மூலமாக அகற்றிக்கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஆள் மாறாட்டம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வைத்தியர்கள் கேள்வி எழுப்பிய போது “பாதுகாப்பு கருதி ஆண் போன்று செயற்பட்டு வருவதாக” கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் ஆண் வயிற்றில் குழந்தை : வைத்திய சாலையில் நடந்த பரபரப்பு சம்பவம் -
Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment