அருட்தந்தையுன் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு தினம் அனுஸ்டிப்பு....படம்
மன்னார் வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவு நாள் இன்றைய தினம் காலை 7 மணியளவில் வங்காலை புனிதா ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் ஆறாம் நாள் வங்காலை தூய ஆனாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றியஅருட்பணி மேரி பஸ்டியன் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொது மக்கள் 10 பேரை சுட்டு படுகொலை செய்த 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் பொது பிரார்த்தனை இன்று இடம் பெற்றது.
குறித்த நினைவுநாள் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை உட்பட அருட்தந்தையர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அருட்பணி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவரும் அவரோடு மரணித்த பொது மக்களுக்காகவும் பொது வழிபாடு இடம்பெற்றதுடன் அவருடைய நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் ஆறாம் நாள் வங்காலை தூய ஆனாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றியஅருட்பணி மேரி பஸ்டியன் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொது மக்கள் 10 பேரை சுட்டு படுகொலை செய்த 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் பொது பிரார்த்தனை இன்று இடம் பெற்றது.
குறித்த நினைவுநாள் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை உட்பட அருட்தந்தையர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அருட்பணி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவரும் அவரோடு மரணித்த பொது மக்களுக்காகவும் பொது வழிபாடு இடம்பெற்றதுடன் அவருடைய நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
அருட்தந்தையுன் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு தினம் அனுஸ்டிப்பு....படம்
Reviewed by Author
on
January 06, 2020
Rating:

No comments:
Post a Comment