7320 இலங்கையர்களுக்கு தடை - சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல
ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 7320 இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையர்களுக்கு விசா நிராகரிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, நடப்பு மாதத்தில் இருந்து சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 60 மற்றும் 80 யூரோ விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
7320 இலங்கையர்களுக்கு தடை - சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல
Reviewed by Author
on
February 07, 2020
Rating:

No comments:
Post a Comment